முதல் முறையாக போயிங் 737 ரக ஜெற் விமானம் தீயணைப்பு சேவையில்!

Print lankayarl.com in ஆஸ்திரேலியா

மாற்றியமைக்கப்பட்ட போயிங் 737 ரக ஜெற் விமானம் முதலாவது தடவையாக தீயணைப்பு சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னால் பயணிகள் ஜெற் விமானம் ஒன்று மாற்றியமைக்கப்பட்டு கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நியூ சவுத் வேல்ஸில் நீர்க்குண்டு விமானமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 15,000 லீட்டர் தண்ணீரையும் ஏனைய நீர்க்குண்டு விமானங்கள் கொண்டு செல்கின்ற அளவை விட அதிகமான அளவு பயர் றிரார்டன்களையும் ( தீயணைக்கப் பயன்படும் ஒரு வகைப் பதார்த்தம்) கொண்டுசெல்ல முடியும்.

இதைவிட இதனால் மேலதிகமாக 63 தீயணைப்பு வீரர்களையும் கொண்டுசெல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிட்னி நகரின் வடக்கு திசையில் இருந்து 150 கிலோ மீட்டரில் போர்ட் ஸ்ரீபனில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க இந்த விமானம் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அனால் இந்தக் தீ விபத்தில் 1,500 ஹெக்டேயர்ஸ் நிலப்பரப்பு எரிந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.