படகுகளில் வருபவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் எச்சரிக்கை

Print lankayarl.com in ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருபவர்களுக்கு அவுஸ்திரேலிய எல்லைகள் பாதுகாப்பு துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் குறிப்பிடுகையில்....அவுஸ்திரேலியாவுக்கு ஒரு சட்டவிரோத படகுப்பயணத்திற்கு நீங்கள் முயற்சித்தால், நீங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, நீங்கள் புறப்பட்டு வந்த நாட்டுக்கு அல்லது உங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவீர்கள்,”இதுதொடர்பான எமது கொள்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லை பாதுகாப்பை மேற்கொண்டு வருகிறது அவுஸ்திரேலியா இருந்த போதிலும் இன்னமும் அங்கு செல்லும் அகதிகள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.அங்க செல்பவர்களில் முக்கியமாக இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ரோஹிங்கியா அகதிகளுமே அங்க குடியேற அதிகமாக முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.