பூஜித்தவிடம் சி.ஐ.டி.யினர் நான்கு மணிநேர விசாரணை!

Print lankayarl.com in ஆஸ்திரேலியா

பொலிஸ் மா அதிபர் பூஜத் ஜயசுந்தரவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நான்கு மணிநேர விசாரணையொன்றை நடத்தியுள்ளனர்.

அதன்படி குறத்த விசாரணையானது நேற்றுக் காலை 7.30 மணி முதல் முற்­பகல் 11.30 மணி நடத்தப்பட்டு, வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு படை­ய­ணியில் பணிப்­பா­ள­ரான நாமல் குமார என்­பவர், கடந்த செப்­டம்பர் 2 ஆம் திகதி விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்தி பல்­வேறு விட­யங்­களை வெளிப்ப­டுத்­தி­யி­ருந்தார். ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்­யப்­பட்­ட­தாக அவர் இதன்­போது தெரி­வித்­தி­ருந்தார்.

அந்த சதியை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் அப்­போ­தைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவே செய்­த­தா­கவும், அவ­ருக்கும் தனக்கும் இடை­யி­லான உரை­யா­டல்கள் பல­வற்றின் ஒலி வடி­வத்­தையும் முன்­னி­லை­பப்­டுத்தி அவர் சி.ஐ.டி.க்கும் முறை­யிட்டார்.

இதனை மைய­ப்ப­டுத்தி சி.ஐ.டி. ஆரம்­பித்த விசா­ர­ணை­களில் ஒரு இந்­தியர், முன்னாள் பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரிவு பணிப்­பாளர் நாலக சில்வா என இருவர் இது­வரைக் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். இரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், இரு பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், இரு பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் , உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் என 45 இற்கும் அதி­க­மான பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ள­டங்­க­ளாக 90 இற்கும் அதி­க­மான வாக்கு மூலங்கள் சி.ஐ.டி.யினரால் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவே தனக்கு அறி­முகம் செய்­த­தா­கவும், பூஜித்­துக்கும் - நாலக சில்­வா­வுக்கும் இடை­யி­லான தொடர்­புகள் குறித்தும் முறைப்­பாட்­டா­ளா­ரான நாமல் குமார தனது வாக்கு மூலத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந் நிலையில் இது­வரை பதிவு செய்­யப்­பட்ட வாக்கு மூலங்­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களை மைய­ப்படுத்தி பொலிஸ் மா அதிபர் பூஜித்தை விசா­ரிக்க சி.ஐ.டி. தீர்­மா­னித்­தது.

அதன் படி ஏற்­க­னவே 3 தட­வைகள் அவரை சி.ஐ.டி.யில் ஆஜ­ராக சி.ஐ.டி. அழைப்பு விடுத்­தது. எனினும் அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சி.ஐ.டி.யில் ஆஜராவதை பொலிஸ் மா அதிபர் தவிர்த்த நிலையிலேயே, நேற்று நான்காவது அழைப்புக்கு அமைய பூஜித் ஜயசுந்தர சி.ஐ.டி.யில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.